Tuesday, December 18, 2012

வளம்தரும் சமுதாய மீன் வளர்ப்பு


கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவிலான புதிய தொழில்நுட்ப வேளாண் முயற்சிகள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், கூட்டாக சேர்ந்து செய்யும் புதிய சமுதாய அளவிலான முயற்சிகள் (New Community Initatives)பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தில் பல வேளாண் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்புடன் சிறப்பாக, வெற்றிகரமாக பல மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள சமுதாய நாற்றங்கால் திட்டம் போன்று, கர்நாடக மாநில பாசன விவசாய அமைப்புகள் சமுதாய அளவில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு அதிகளவு லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
பாசன முறை சமுதாய மீன் வளர்ப்பு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
கர்நாடக மாநிலத்தில் உள்ள சோமசுந்தரா என்ற சிறிய பாசனஓடை சில ஆண்டுகளுக்கு முன்பு புறக்கணிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் நிலமில்லாத 33 குடும்பங்கள் இணைந்து கர்நாடக மாநில வேளாண்துறை பங்களிப்புடன், உலக வங்கி உதவியுடன் சமுதாய அளவில் மீன் பண்ணைகளை இங்கு அமைத்தன.
இதன் மூலம் பாசன ஓடை விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாய கூட்டுறவுச் சங்கங்கள், இளைஞர் சங்கங்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களை இணைத்து கிராமசபையின் உதவியுடன், வருவாய் திரட்டும் வரி விதிப்பு செயல்படுத்தப்பட்டது.
பின்னர் மீன் வளர்க்கும் உரிமைகள் பெறப்பட்டு சமுதாய அளவில் மீன் வளர்க்கும் பணிகளை தொடங்கினர்.
பாசனக் குட்டையில் சுண்ணாம்பு மற்றும் இயற்கை உரங்கள் போடப்பட்டன. பல நீர்க் களைகள் அகற்றப்பட்டன. 1.25 மீட்டர் ஆழத்துக்கு மீன்குட்டைகள் அமைக்கப்பட்டன. ÷இவற்றில் கட்லா, ரோகு, கெண்டை போன்ற 1,35,000 மீன் குஞ்சுகள் குட்டைகளில் விடப்பட்டன. குறிப்பாக ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிராமவாசிகள் மீன் விட்ட பின்னர் காவல் பணிகளை மேற்கொண்டனர். பின்னர் ஐந்தரை மாதங்கள் கழித்து மீன்கள் நல்ல அளவை அடைந்த உடன் பகுதி அளவில் அறுவடைப் பணிகள் தொடங்கின.ஆறு மாதத்தில் அனைத்து மீன்களும் பிடிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.
மீன்பிடிப்பு கூலியாக ஒரு கிலோவுக்கு ரூ.4 முதல் 5 வழங்கப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட வருவாயில் 50 சதவீதம் பாசன பயனாளிகள் சங்கத்துக்கும், மீதியுள்ள 50 சதவீதம் பணம், நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.
எட்டு மாத கால தண்ணீர் உள்ள ஓடையில் 533 கிலோ வரை மீன்கள் பெறப்பட்டு, மொத்த வருமானமாக ரூ. 2,70,000 கிடைத்துள்ளது. இவ்வாறு பாசன ஓடைகளை சரியான திட்டமிடல் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சமுதாய அளவில் செயல்பட்டால் பாசன ஓடைகளை எளிதாகப் பராமரிக்கவும், அதன் வாயிலாக பல ஆக்கப்பூர்வமான பணிகள் மூலமாக கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி, தன்னிறைவு எளிதாக அடைய முடியும் என்கிறார் தி.ராஜ்பிரவீன்.

காளான் வளர்ப்பு



காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

வருகை தந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் இறுதியில் காளான் வளர்ப்பைப் பற்றிய காணொளி இருக்கிறது. நிச்சயம் அந்த காணொளியைப் பாருங்கள்.. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அவை விடையளிக்கும். 


OYSTER MUSHROOM PRODUCTIONசெய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். நாம் முன்னேற வேண்டுமானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இருக்கிறது. அதிலும்  சுயமாக முன்னேற நினைப்பவர்களுக்கு உதவுபவை சிறுதொழில்கள். அதிக முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க இத்தகைய சிறுதொழில்களே மிகவும் சிறந்தவையாக இருக்கிறது. பாருங்கள்! சிறுதொழில் செய்து இப்போது நாட்டில் பலரும் பெரிய தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:

இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.  எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளானின் ரகங்கள்:

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.

வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.

சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும். 


விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
(Marketing)

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.

செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.

காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!


தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.





காளான் வளர்த்து வெற்றி வாகை சூடிய பெண்மணியின் அனுபவ பேட்டி
இந்தக் காணொளியில் காணலாம்.




இந்த காளான் வளர்ப்பைப் பற்றி மேலும் தகவல்கள் பெற உங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கமையங்களையோ அணுகி தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். பதிவைப்பற்றிய தங்களின் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்..!! முடிந்தால் இன்ட்லி, தமிழ்10, பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் பகிரவும்.. நன்றி நண்பர்களே..!! !!

சோப் தயாரிப்பு


ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு சுயதொழில் – 10

ஆர்.பி.கருணாகரன் : சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம்பாளையத்தில் பாண்டியன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதாவது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர்.
வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில் பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டல பகுதிகளில் நன்றாக விற்கிறது. போட்டி அதிகம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தை கடைபிடிப்பது முக்கியம்.
அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போதுதான், ஒருமுறை வாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். பின்னர் விலையை சற்று கூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல் தொழிலை துவக்கினேன். உற்பத்தி, கொள்முதல் மற் றும் விற் பனையை கணவர் பார்த்து கொள் கிறார். நிர்வாகத்தை நான் பார் த்து கொள் கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில் இறங்கி உழைத் தோம். இதனால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்கு விற்க முடிந்தது. இப்போது சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துலக்கும் சோப், பவுடர் ஆகியவை யும் தயாரித்து விற்கி றோம். புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால்தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.
தயாரிப்பது எப்படி?
சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
கட்டமைப்பு: 2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பி ரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2 ஆயிரம், 10 கேன் ரூ.2 ஆயிரம், இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது.
வருவாய்: ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
தேவையான பொருட்கள் : சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95 ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன் ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்), எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்), சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).
கிடைக்கும் இடங்கள் : சோடா – கோவை, சிலரி ஆயில் – புதுவை, டினோபால் பவுடர் – மும்பை, க்ளே – கேரளா, கால்சைட் – சேலம், சிலிகேட் – கோவை, எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் – கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு
குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.
சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.

சோப் ஆயில் தயாரிப்பு


வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர்.
அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும்,தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20நாள் உழைப்பு, 10 நாள் விற்பனை என்று செயல்படுகிறேன். லாபகரமாக போகிறது.
ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு சோப் ஆயில் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறேன். என்னதான் தரமாக தயாரித்தாலும், அதை நம்ப வைக்க வேண்டும். அதற்கு சோப் ஆயிலை சாம்பிள் கொடுத்து தரத்தை அறிய செய்யலாம். அப்படி கிடைக்கும் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக ஆர்டர் கொடுப்பார்கள். இவ்வாறு ரமணன் கூறினார்.
பயிற்சிக்கு
பல்வேறு கிளீனிங் பவுடர், ஆயில்கள் தயாரிப்பு குறித்து மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் சேவை மையங்கள்,மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சியும்,சான்றிதழும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
தயாரிப்பது எப்படி?
ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.
இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி,சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ,வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம்,வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.
சந்தை வாய்ப்பு
ஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்கு நேரில் விற்கலாம். இதன் மூலம் தினசரி 50 லிட்டர் எளிதில் விற்று விடலாம். சோப் ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களை விட பல மடங்கு விலை குறைவாகவும், பிராண்டட் சோப் ஆயில்களை போல் தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர் வாங்குகிறார்கள்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான சோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்ப உற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு பினாயில், சோப் பவுடர், சொட்டு நீலம்,கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்தால் லாபம் அதிகரிக்கும்.
என்னென்ன தேவை?
சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட்,பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள்,ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.
தளவாட சாமான்கள்
50 லிட்டர் கேன் 1, 25 லிட்டர் பிளாஸ்டிக் வாளி 1, 20 லிட்டர் வாளி 3, மக் 2, தண்ணீர் வடிகட்டி 1, சில்வர் கரண்டி, புனல் 1,பாட்டில் கழுவும் பிரஷ் 1, மற்றும் 2, 5 லிட்டர் காலி பாட்டில்கள், கேன்கள்.
உற்பத்தி செலவு
சிலரி ஒரு கிலோ ரூ.120, காஸ்டிக் சோடா 100 கிராம் ரூ.4,சோடா ஆஷ் ஒரு கிலோ ரூ.30, யூரியா ஒன்றரை கிலோ ரூ.12, ஒலிக் ஆசிட் 100 கிராம் ரூ.10, பெர்ப்யூம் 15 மில்லி ரூ.25, லேபிள் 200 ரூ.10, காலி பாட்டில்கள் ரூ.10 என ரூ.221செலவாகும். இதர செலவுகள் உட்பட 10 லிட்டர் தயாரிக்க ரூ.230 வரை செலவாகும்.
வருவாய்
ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.23 செலவாகிறது. அதை உள்ளூரில் ரூ.35க்கும், வெளியூர்களில் ரூ.45க்கும் விற்கலாம். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு லாபம் ரூ.12க்கு குறையாமல் கிடைக்கிறது. ஒரு நாளில் 50 லிட்டர் வரை தயாரிக்கலாம் என்பதால் ரூ.12 வீதம் 50 லிட்டருக்கு ரூ.600 லாபம் கிடைக்கும். மாதம் 25 நாள் வேலை செய்தால் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விற்கும்போது போக்குவரத்து செலவு ஏற்படும். ஆனால் லாபம் அதிகமாக இருக்கும்.
இணைய தளத்திலிருந்து
Engr.Sulthan

வெள்ளாடு வளர்ப்பு


சிறு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை----வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

முழுவதும் படிக்க...யார் தொடங்கலாம்?
  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்
  • நன்மைகள் 
    • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
    • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
    • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
    • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
    • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
    • நல்ல எரு கிடைக்கிறது.
    • வருடம்முழுவதும்வேலை
    •  
    • வெள்ளாட்டு இனங்கள்
    சிறந்த இந்திய இனங்கள்
    ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
    பீட்டல் - பஞ்சாப்
    பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
    தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
    சுர்தி - குஜராத்
    காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
    வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
    இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
    அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்
    வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
    ஜமுனாபாரி.

  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்.  
  •  
  •    
  • தலைச்சேரி / மலபாரி
    • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
    • 2-3 குட்டிகளை போடும் திறன்
    • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.

    போயர்


      • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
      • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
      • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
      • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்


      வெள்ளாடுகளை தேர்வு செய்தல்

      பெட்டை ஆடுகள்
      • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
      • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
      கிடாக்கள்
      • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
      • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
      • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
      • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து


      • தீவனப் பாரமரிப்பு
      • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
      • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
      • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
      • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
      • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
      குட்டி தீவனம்
      வளரும் ஆட்டு தீவனம்
      பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
      சினை ஆட்டு தீவனம்
      மக்காசோளம்
      37
      15
      52
      35
      பருப்பு வகைகள்
      15
      37
      ---
      ---
      புண்ணாக்கு
      25
      10
      8
      20
      கோதுமை தவிடு
      20
      35
      37
      42
      தாது உப்பு
      2.5
      2
      2
      2
      உப்பு
      0.5
      1
      1
      1
      மொத்தம்
      100
      100
      100
      100
      • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
      • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
      • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
      • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
      • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்
      •  
      • இனபெருக்கப் பாரமரிப்பு.
        • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
        • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
        • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
        • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
        • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
        • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
        • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
        • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
        • சினை காலம் 145-150 நாட்கள்.

          • குடற் புழு நீக்கம்
      • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
      • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
      • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
      • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

      • தடுப்பூசிகள்
      • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
      • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
      • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்

      கொட்டகை பாரமரிப்பு

        • 1.ஆழ்கூள முறை

      • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
      • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
      • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
      • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்

      • 2.உயர் மட்ட தரை முறை
        • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
        • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்

              • வளர்ப்பு முறைகள்
          1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
          • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
          2.கொட்டகை முறை.
          • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
          • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
        • வெள்ளாடு காப்பீடு திட்டம்
          • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
          • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.
               

      1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
      • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
      2.கொட்டகை முறை.
      • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
      • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
      • வெள்ளாடு காப்பீடு திட்டம்
           
        •  

      • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
      •       
          • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்
            நன்றி : பனைக்குளம் ஹோம்பேஜ்